பிறமொழியாளர்கள் ஏன் தமிழகத்தை நாடவேண்டும்?
தமிழை, தமிழகத்தை அளவு கடந்து நேசிப்பவர்கள் தமிழர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என எதிர்பார்க்க முடியாது. பிறமொழியாளர்கள் தமிழகத்தில் நம்மை அடக்கியாள முடியாது. மாறாக,அனைவரும் இங்குள்ள ஞானசெல்வத்தை மட்டுமே கொண்டு செல்லமுடியும், இங்குள்ள வாழ்வாதார அமைப்புகள் வளர உதவமுடியும். இதனால் தமிழ், தமிழகப்பண்பாடு உலகளவில் பரந்து விரிந்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தில் பிறமொழியாளர்கள் வளர்வதை கண்டு நாம் அசூயை அடையக்கூடாது, நமது பண்பாட்டு வளர்ச்சிக்கான உழைப்பு பங்களிப்பாளர்களாக அவர்களை பார்க்கவேண்டும். கிரேக்கம், ரோமாபுரி போன்ற நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட நாடு தமிழ்நாடு. இது தமிழருக்கு நாளுக்கு நாள் பெருமை சேர்க்கும் அம்சமாகும். எனவே, பிறமொழியாளர்கள் நமது மண்ணை அண்டிப்பிழைபபதை நாம் ஆரோக்கியமான கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும். பிறமொழியாளர்கள் நம்தமிழை சிரத்தையுடன் படிக்கிறார்கள். தமிழ்வளர இதுதான் முதல்படி. பிறமொழியாளரான ஜி.யு.போப்பின் வருகைதான் உலகளவில் திருக்குறளை, திருவாசகத்தை இன்று பேசப்படுவதற்கு காரணமானது. பாரததேசமெங்கும் போற்றப்படும் சுவாமி விவேகானந்தருக்கு தமிழரான சேதுபதிமன்னன் அமெரிக்கா செல்ல உதவியதுதான் இந்திய ஆன்மீக மறுமலர்ச்சிக்கே வித்திட்டது, அனைத்துத்துறை வல்லுனர்களும், எத்தனையோ ஞானிகளும் தமிழகத்தை ஏன் நாடி வந்தார்கள், வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நமது மொழிவளம், ஆன்மீக வளம், பண்பாட்டு வளம் ஆகியன காரணங்களாகும்.தகவல் தொழில்நுட்ப அசுர வளர்ச்சி இன்று உலகை ஆக்கிரமித்துள்ளது. இத்துறை யில் கணிசமான ஆதிக்கம் செலுத்துபவனாக தமிழன் பாராட்டப்படுகிறான். கொள்கை முடிவெடுப்பதில், பிரச்சினைகளை சீர்துாக்கி பார்ப்பதில், பொறுமை கடைபிடிப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழனே என பிறமொழியாளர்களால் பாராட்டப்படுகிறான். வெளிநாட்டு இதழ்களில் தமிழனின் பங்களிப்பு பிற மொழியாளர்களால் போற்றப்படுகிறது. திரைத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் பிறமொழியாளர்களின் வருகை நமது உள்கட்டமைப்பு வளர்சிக்கு பேரூதவி புரிந்து வருகிறது. ஒவ்வொரு கலைஞனையும் என்ன இனம், என்ன மொழி என பார்த்துக்கொண்டிருப்பது கலை வளர்சிக்கு எதிரான கீழ்மைக்குணமாகும். ஒவ்வொரு பிறமொழி கலைஞனாலும், ஞானியாலும், தமிழகம் பெற்றுள்ள பயன்களை கருத்தில் கொள்ளவேண்டும். துாய தமிழ் உணர்வாளன் ஒரு மகத்தான ஞானியாவான். அவன் யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்றே உரைப்பான்.
Friday, December 16, 2011
Sunday, July 31, 2011
பேரூலகம் சிறு குடும்பம்
பொன்.வந்தியத்தேவன் கவிதைகள்
பேரூலகம் சிறு குடும்பம். . . . .
மடிகணினியுடன் உறவாடும் மனைவி மடியில் பிளஸ்-2 புத்தகங்களுடன் மருத்துவபடிப்பு கனவில் மன்றாடும் மகள் சிறகுமுளைக்காத சிட்டுக்குருவியாய் சிற்றருவியாய் சிந்தனைக்கேள்விகளை எழுப்பும் என் சிறிய மகள். குளிரூட்டப்பட்ட படுக்கை அறை அவ்வப்போது கொஞ்சும் கொசுக்கள் புறாக்களின் படபடப்பாய் நான். விடிகின்ற பொழுதில் விடைதேடும் ஆன்மா விளைவறியா இயக்கங்கள் உள்ளும், புறமும். நடைபழகும் பிரச்சினைகள் நகமும் சதையுமாய் உறவுகள் நாள்தோறும் நகரும் என் புதுயுகம் காணும் கனவுகள். ...
ஒவ்வொரு நாளையும் யாரேனும் ஒருவருக்காவது உதவும் நாளாய் மாற்றச் செய்யும் மனது. ஒவ்வொரு நாளையும் திருவிழா நாளாக கொண்டாடச் சொல்லும் மனது. ஆம்புலன்ஸ் அலறிச்செல்கையில் அதில் வாடும் ஜீவனுக்காக பிரார்த்தனை செய்யும் மனது. ஆட்டோகாரருடன் ஐந்து ரூபாய்க்கு சண்டையிடுகையில் அவர்கிழிந்த காலரை பார்த்து இரக்கப்படும் மனது.
முடிதிருத்துபவரின் மணமுறிவு கதைகேட்டு கனமாகிப்போகும் மனது.
குடும்பசுமைகளை எனக்காகவே நான் சுமந்தாலும் என்போன்ற சக சுமைதுhக்கிகளின் சஞ்சலங்கள் கண்டு தடுமாறிப்போகும் மனது.
சூதுவாதறியா பள்ளிக்குழந்தைகள் சுhலையை கடக்கையில் இந்த தேசத்தின் எழுச்சியை தரிசிக்கும் மனது.
முன்னோடி எந்தையரின் முடிவுபெறா இலக்குகளில் முழுமைகாண ஏங்கும் மனது.
மனமே, கேள். அளித்தலில் இன்பம் ஆதரித்தலில் இன்பம் இழப்பதில் இன்பம் ஈதலிலும் இன்பம் உடன்படுதலில் இன்பம் உரிமைக்கு போராடுவதில் இன்பம் ஒற்றுமையில் இன்பம் ஒருமையில் இன்பம் பொறுப்பதில் இன்பம் புரிவதில் இன்பம் கனிவதில் இன்பம் அதற்கென காத்திருத்தலும் இன்பம்.
சின்னஞ்சிறு குடும்பத்தில் பேரூலகையே காண்கிறேன். . . பேரூலகம் அனைத்தும் சிறு குடும்பமாய் காண்கிறேன்.
கவிஞர்.பொன்.வந்தியத்தேவன். மாநில இலக்கிய அணி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்.

Wednesday, April 6, 2011
தீவிர வலை பயிற்சி
அகத்துள்ளே ஆராதனை
வாழ்வின் நீண்ட நெடிய சாலைகள் எங்கும் அனுபவ சருகுகள் பூமி தாய்மடியை நாடும் நம்பிக்கை விழுதுகள் பொன்னொளி வீசும் ஞான கதிரவன் பூபாளம் பாடும்கவிதை பறவைகள் மனக்குதிரையின் தடுமாற்றம் வேகம் தணிந்தது அகத்துளே ஆராதனை ஆரம்பம்
Thursday, December 2, 2010
யோகியுடன் பழகிய நாட்கள். . .
யோகியுடன் பழகிய நாட்கள். . . .
தவச்சிகரத்தை அடைந்ததோற்றம்
குழலை போல் மழலை மொழியில்
பழகிடும் தவ சுபாவம்
வானத்தை அளக்கும் கண்கள்
வையத்தை அணைக்கும் கைகள்
ஞாலத்தை நடையில் காட்டும்
ஞாயிற்றின் மறுபதிப்பு
ஐமுக தரிசன அண்ணாமலை
அதில் ஆதியாய் விளங்கிடும் ஜோதி நீயே
இவைதான் பகவான் யோகிராம்சுரத்குமார் அவர்களை பற்றி 1987 ல் நான் எழுதிய கவிதையின் தொடக்க வரிகள்.
யோகியை நான் சந்தித்தது அவர் என்னை ஈர்த்தது திருவண்ணாமலை கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோவில் வாசலில். அதனருகே ஐந்துகோபுர தரிசனத்தை நாம் காணலாம். அங்கு தவகோபுரமாக விளங்கிய யோகியின் அருளைப்பெற்றேன்.
பல ஞான சாகரங்கள் சர்வ சாதாரணமாக வாழும் பூமியாக திருவருணை திகழ்ந்து வருகிறது. மனிதகுலத்தின் மிகப்பெரிய ஞானபூமியாக திகழும் திருவண்ணாமலையில் நான் பட்டதாரி இளைஞனாக சுற்றித் திரிந்த காலம் அது. காலையில் கோவிலின் பின்புறத்தில் யோகாசனப்பயிற்சி நடைபெறும் அதில் விரும்பி கலந்து கொள்வேன். மாலையில் ரமணாஸ்ரம நுhலகம் என்னை கவர்ந்திழுக்கும்.
யோகிகளின் தன்னடக்கம், எளிமை, ஒளிபொருந்திய முகம், விஞ்சிய ஞானம், அதிநுட்ப உணர்வு, கூரிய பார்வை, உலகளாவிய மனித நேயம், அனைத்து ஜீவன்களையும் நேசிக்கும் மனப்பான்மை, உரக்கச்சிரித்தல், உண்மையின் நெருப்பாய் திகழ்தல், பயபக்தியுடன் கோவிலை வலம் வருதல், கனிவான பேச்சு, கவிதை போன்ற வாழ்க்கை. . . . இதுபோன்ற இலக்கணங்களுடன் திகழ்ந்த யோகிராம் சுரத்குமார் அவர்களை சாதாரணமாக விசிறி சாமியார் என மக்கள் அழைப்பார்கள்.
ஒரு நாள் சன்னதி தெருவின் சுவாமியை தரிசிக்க சென்றேன். என் கையில் ஒரு சில கறுப்பு திராட்சைகள் மட்டுமே இருந்தன. தரிசனத்திற்காக காத்திருந்த வசதிபடைத்த பெரியவர் ஒருவர் உயர்ந்த ஆப்பிள்களை கையில் வைத்திருந்தபடி காத்திருந்தார். என்னால் அது போன்ற உயர்ந்த கனிகளை தர முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் இருந்தது, என்னை கவர்ந்திழுத்த அவரது கீதமினிய குரலால் எனக்கு ஆசிகள் வழங்கியதுடன் எனக்கு அதே ஆப்பிள்களை எனக்கே வழங்கினார். ஏதை உயர்வாக நான் நினைத்து குருவிற்கு சமர்ப்பிக்க நினைத்தேனோ அவற்றை எனக்கே அளித்து என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்கள்,
(continued
Saturday, November 20, 2010
பரணி தீபம்
இது கார்த்திகை மாதம்
அண்ணாமலையார் தீபம் ஒளிரும்
நான் அப்பாவின் கைபிடித்து தீபம் காண சென்ற நாட்கள் திவ்யமான நாட்கள்
அதிகாலை தெருபிள்ளையர் கோவிலில்
மேளதாளங்கள் முழங்க
ஊர்பெரியவர்கள் கூடி நிற்க
அப்பா பரணிதீபம் ஏற்றுவார்....
தீபத்தின் ஒலிகற்றைகள்
அலைஅலையாய் பெருகிவர
ஆன்மாவில் ஒரு லயம் தோன்றும்
தீபத்தின் முன்னே
மனதின் அழுக்குகள் அகலும்
மாய வலைகள் மருட்டும் பகை விலகும்
தீபம் வெளியில் வைப்பது
உள்ளுக்குள் வெளிச்சம் வருவதற்காக
தீபம் நெஞ்சில் தெரியும்போது
தெளிவை தரும் சித்தர் பாடல்கள்
அகத்தே கருத்து புறத்தே வெளுத்த மாந்தர் கூட்டம் அவலம் புரியும்
பொறமை புலனடகமின்மை கருமித்தனம் கஞ்சத்தனம் கோள் சொல்லும் கீழ்மை குனகேடுகள் எல்லாம்
தீப ஒளி முன்பு மாயும், மாளும்.
தீபங்களை வரிசைபடுத்தி தீபங்களை அதிகபடுத்தி
தீபங்களை தூண்டிவிட்டு தீபங்களோடு தீபமாய் மனிதகுலம் பொலிவு பெரும் காட்சி
பரணி தீப காட்சி
மகாதீப காட்சி மகோனத காட்சி
பரணிதீபம் பார்க்க பார்க்க யோகியாய் வாழ ஆசை பிறக்கும்
பரணிதீபம், மகாதீபம் எல்லாம் ஒன்றே
அப்பாவின் அருமைபணி எம் காலத்திலும் தொடர்கிறது
மேளதாளங்கள் முழங்க
தெருபிள்ளையர் கோவிலில்
பரணிதீபம் ஏற்றுகிறோம் நாங்கள்
எங்கள் குலம் செழிக்க
எங்கள் மக்கள் வாழ்வு பொலிவுற
எங்கள் குடும்பம் புகழ் ஓங்க
எங்கள் சகோதர சகோதரிகள் நலமுடன் வாழ்ந்திட
எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பரவிட
எல்லோர் வாழ்விலும் இருள் விலக ஒளி ஓங்கிட
தீபங்களை போற்றுவோம் பாபங்களை வெல்வோம்

Saturday, September 18, 2010
Subscribe to:
Posts (Atom)